Evangelical Theological Seminary

Overview

Evangelical Theological Seminary

(Tamil Division of Tung Ling Seminary)


Tung Ling Bible College (Singapore) was first established in Singapore in 1979 and since then has been successfully training Christians from all denominations and all walks of life. In March 1993, an extension center was set up in Malaysia to be better able to serve the Malaysian Churches. Tung Ling in Malaysia is now registered as Tung Ling Seminary.

In 1998, Tung Ling Seminary pioneered the Tamil Division, under the name of Evangelical Theological Seminary (ETS). ETS was set up to meet the growing needs of the Tamil churches in Malaysia for good theological education.

Rev. Jagadeesan Kalyanakumar from India has been appointed as the Principal of the Tamil Division. Rev. Jagadeesan Kalyanakumar also heads the Harvest Training Institute, India which is running the School of Ministry (Tamil) in Chennai. The School of Ministry (Tamil) in Chennai, India is also a part of the Tung Ling program.

ETS presently runs a Diploma and Degree Program (called the Pastoral Interns Program Tamil – PIP Tamil) jointly offered with the Maranatha Bible Training Institute (India). The Maranatha Group of Bible Training Institutes has a rich pentecostal evangelical heritage, founded since 1963, and is one of the larger Bible School in India with 4 Bible Colleges and Institutes. Since its inception MBTI has trained several hundreds of church planters and some of the more respected church and movement leaders both in India and abroad. MBTI is a member of the Asia Theological Association (ATA).


View Brochure

சுவிசேஷ இறையியல் கல்லூரி

(துங் லிங் வேதாகமக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவு)


முதன்முதலில் துங் லிங் வேதாகமக் கல்லூரி (சிங்கப்பூர்) சிங்கப்பூரில் 1979-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அன்று முதல் வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும் எல்லா சபைப் பிரிவினர்களுக்கும் வெற்றிகரமாக வேதாகமப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு 1993-ஆம் ஆண்டில் மலேசியாவில் வேதாகமக் கல்லூரியின் விரிவாக்க மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ள துங் லிங் இப்போது துங் லிங் செமினரி (வேத கலாசாலை) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் 1998-ஆம் ஆண்டில் துங் லிங் செமினரி என்ற பெயரில் தமிழ்ப் பிரிவு ஒன்று சுவிசேஷ இறையியல் கல்லூரி (Evangelical Theological Seminary) தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மலேசியாவில் வளர்ந்துவரும் தமிழ்த் திருச்சபைகளின் இறையியல் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உயர் நோக்குடன் இது நிறுவப்பட்டது.

இந்தியரான மறைதிரு ஜெகதீசன் கல்யாணகுமார் அவர்கள் தமிழ்ப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மறைதிரு ஜெகதீசன் கல்யாணகுமார் அவர்கள் இந்தியாவில் உள்ள சென்னையில் ஹார்வெஸ்ட் வேதாகம பயிற்சிப் பள்ளி ஒன்றை நிறுவி அதற்கு தலைவராக இருந்து பணியாற்றி வருகிறார். ஊழியப் பயிற்சிப் பள்ளி (School of Ministry) எனும் பெயரில் அது சென்னையில் (தமிழ்) இயங்கி வருகின்றது. அதுவும்கூட துங் லிங் இறையியல் கல்லூரியின் ஒரு பகுதி நிகழ்வு ஆகும்.

தற்சமயம் சுவிசேஷ இறையியல் கல்லூரியானது டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை துணை ஆயர்களின் வேதாகமப் பயிற்சி என்ற தலைப்பில் (Pastoral Interns Programme – PIP Tamil) தமிழில் வழங்கி வருகின்றது. 1963-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகின்ற பெந்தெகொஸ்தே சபை ஊழியர் சிறப்பியல்புகளை கொண்ட மாரநாதா வேதாகமப் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மாரநாதா வேதாகமப் பள்ளி 4 கிளை பயிலகங்களைக் கொண்ட ஒரு மாபெரும் வேதாகமக் கல்லூரி நிறுவனமாகும். மாரநாதா வேதாகமக் கல்லூரி நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டு இன்று வரை நூற்றுக்கணக்கான சீஷர்களைப் பயிற்றுவித்து இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் திருச்சபைகளை ஸ்தாபித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாரநாதா வேதாகமப் பள்ளி (இந்தியா) ஆசிய இறையியல் சங்கத்தின் (Asia Theological Association) ஒரு அங்கமாகவும் இணைந்து பணியாற்றி வருகிறது.


View Brochure